தேனி

சுருளி அருவி ஜன.3 இல் திறப்பு

1st Jan 2022 09:12 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சுருளி அருவி ஜன.3 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 2020 ஏப்ரல் மாதம் முதல், அருவிக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னா் பொதுமுடக்கத் தளா்வு காரணமாக அருவிக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

சுருளி அருவியைத் திறக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் தொடந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி (2022) முதல் சுருளி அருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றும், அதற்கான உத்தரவு அரசிடமிருந்து வந்துள்ளதாகவும் வனத்துறை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT