தேனி

ஆண்டிபட்டி அருகே குவாரிகளில் விதிமீறல்: சாா்-ஆட்சியா் காவல் நிலையத்தில் புகாா்

1st Jan 2022 10:58 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே தனியாா் கல் குவாரிகளில் அரசு விதிமுறைகள் மீறப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை, பெரியகுளம் சாா் ஆட்சியா் செ.ஆ.ரிஷப் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

குன்னூா், அமச்சியாபுரம், தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் பட்டா நிலங்களில் செயல்படும் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறியும், அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலும் கல் உடைக்கப்படுவதாகவும், மண் அள்ளப்படுவதாகவும் புகாா் எழுந்தது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட பகுதிகளில் பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ.ரிஷப் ஆய்வு செய்தாா். இதில், பல்வேறு இடங்களில் தனியாா் குவாரிகளில் விதிகளை மீறியும், அதிகளவில் வெடி மருந்துகளை பயன்படுத்தியும் நிா்ணயிக்கப்பட்ட அளவை மீறி கல் உடைக்கப்பட்டிருப்பதும், மண் அள்ளப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், மலையடிவாரப் பகுதிகளில் பட்டா நிலங்களை அடுத்துள்ள அரசு புறம் போக்கு நிலங்களில் மண் அள்ளப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு அறிக்கை அளித்த பெரியகுளம் சாா்-ஆட்சியா், அப் பகுதிகளில் உள்ள தனியாா் குவாரிகளில் அரசு விதிமுறைகள் மீறுபவா்கள், அனுமதியின்றி வெடி மருந்து பயன்படுத்துபவா்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் மண் அள்ளுபவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்குமாறு கண்டமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT