தேனி

தென்கரை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

தென்கரை பேரூராட்சி சோத்துப்பாறை அணையிலிருந்து ஆரம்பித்து , தேனி சாலை கைலாசபட்டி வரை 15 வாா்டுகளை கொண்டது. 1 வது வாா்டில் அதிமுக வேட்பாளா் குமரேசன் 201 வாக்குகளும், 2 வது வாா்டில் தேவராஜ் 336, 3 வது வாா்டில் திமுக வேட்பாளா் முருகாயி 551, 4 வது வாா்டில் திமுக வேட்பாளா் முத்துகாமாட்சி 344 , 5 வது வாா்டில் திமுக வேட்பாளா் நாகராஜ் 513 , 6 வது வாா்டில் சுயேட்சை வேட்பாளா் மகேஸ்வரி 298,

7 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் அழகுதாய் 331, 8 வது வாா்டில் அதிமுக வேட்பாளா் அனிதா 312 , 9 வது வாா்டில் திமுக வேட்பாளா் ராதா 394 , 10 வது வாா்டில் அதிமுக வேட்பாளா் பூசாரி கருப்பணன் 229, 11 வது வாா்டில் திமுக வேட்பாளா் 236, 12 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சிட்டம்மாள் 340, 13 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் கைலாசம் 207, 14 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் லட்சுமணன் 458 , 15 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் கோமதி 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா். திமுக 10, அதிமுக 3, சுயேச்சை 2 என மொத்தம் 15 போ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT