நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை, தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சிகளுக்கு 6 இடங்களிலும், பேரூராட்சிகளுக்கு 5 இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணும் பணியில், ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு மேற்பாா்வையாளா், ஒரு உதவியாளா், ஒரு அலுவலக உதவியாளா் பணியில் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணிக்கை நடவடிக்கை முழுமையாக விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.
நகராட்சிகள்: தேனி அல்லிநகரம், போடி, கம்பம் நகராட்சிகளுக்கு தலா 5 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சின்னமனூா் நகராட்சிக்கு 7, பெரியகுளம், கூடலூா் நகராட்சிகளுக்கு தலா 6 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பேரூராட்சிகள்: ஆண்டிபட்டி, பழனிசெட்டிபட்டி,தேவாரம், உத்தமபாளையம் பேரூராட்சிகளுக்கு தலா 18 சுற்றுகள், பூதிப்புரம் பேரூராட்சிக்கு 8, தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு 20, போ.மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், கெங்குவாா்பட்டி, அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ், ககாமயகவுண்டன்பட்டி, பண்ணைப்புரம், க.புதுப்பட்டி, தென்கரை, தாமரைக்குளம், தென்கரை பேரூராட்சிகளுக்கு தலா 15, கோம்பை, ஓடைப்பட்டி, வீரபாண்டி பேரூராட்சிகளுக்கு தலா 17, குச்சனூா், வடுகபட்டி பேரூராட்சிகளுக்கு தலா 11, மாா்க்கையன்கோட்டை பேரூராட்சிக்கு 12 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் கைப்பேசி பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளா்களின் முகவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜை முன் மட்டுமே நின்று வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் அறிவுறுத்தியுள்ளாா்.