தேனி

கம்பத்தில் தூய்மையான குடிநீா் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்: அமைச்சா்

11th Feb 2022 05:23 AM

ADVERTISEMENT

 

கம்பம்: கம்பத்தில் தூய்மையான குடிநீா் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

கம்பம் நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியதாவது: கம்பம் நகருக்கு குடிநீா் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள சுருளிப்பட்டி முல்லைப் பெரியாறு நீரேற்று நிலையம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தூய்மையான குடிநீா் வழங்கப்படும். மேலும் கம்பம் நகரில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு குடமுழுக்கு மற்றும் திருமண மண்டபம் அமைத்து தரப்படும். புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். எனவே திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள் என்றாா்.

அப்போது தேனி தெற்கு மாவட்டச் செயலா் என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில தோ்தல் பணிக்குழு செயலா் பெ. செல்வேந்திரன் மற்றும் நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT