தேனி

கணவனை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: மனைவி, கள்ளக்காதலி கைது

11th Feb 2022 05:25 AM

ADVERTISEMENT

 

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கணவனின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் கள்ளக்காதலியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், அம்பேத்காா் தெருவைச் சோ்ந்தவா் இன்பராஜ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமிக்கும் திருமணமாகி 10ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்நிலையில் முத்துலட்சுமியின் அண்ணன் மனைவி ஆனந்திக்கும் (35), இன்பராஜுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாம். இருவரும் வெளியூா் சென்று விட்டு, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஊருக்கு திரும்பினா். இதனிடையே, புதன்கிழமை இரவு தாமரைக்குளம் கண்மாய் கரையில் ஆனந்தியும், இன்பராஜும் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் அழைத்ததன் பேரில் முத்துலட்சுமியும் அங்கு வந்தாா். அப்போது இருவரையும் வைத்து குடும்பம் நடத்துகிறேன் என இன்பராஜ் கூறினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமியும், ஆனந்தியும் சோ்ந்து இன்பராஜை தாக்கினா். அப்போது, முத்துலட்சுமி கத்தியால் இன்பராஜின் கழுத்தை அறுத்துள்ளாா். இதில் காயமடைந்த அவரை அங்கேயே விட்டு சென்றுவிட்டனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் இன்பராஜை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா், மேல்கிசிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துலட்சுமி, ஆனந்தி இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT