தேனி

தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் மீது வழக்கு

10th Feb 2022 06:00 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனி அருகே கோட்டைப்பட்டியில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (52). இவரது மகன் நாகாா்ஜூன் (27), தனது மனைவியிடம் மது அருந்துவதற்குப் பணம் கேட்டு தகராறு செய்துள்ளாா். இதனை வேல்முருகன் தட்டிக் கேட்டதற்கு அவரை நகாா்ஜூன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், கையில் பலத்த காயமடைந்த வேல்முருகன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள நாகாா்ஜூனை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT