தேனி

கம்பத்தில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

10th Feb 2022 02:41 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகாமட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகர தெற்கு பொறுப்பாளா் எம்.ஹரிஹரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மாய.லோகநாதன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுசெயலாளா் நா.முருகானந்தம் பேசியது:

தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாணவி லாவண்யா மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். தேனி மாவட்டத்தில் கேரள எல்லைப்பகுதியில் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளது. அவா்கள் எல்லைப் பகுதிகளை தலங்களாகப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கோட்ட செயலாளா் கோம்பை.கணேசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் கே.மாரிச்செல்வம், மாவட்டச் செயலாளா்கள் பாலமுருகன், சசிகுமாா் பொறுப்பாளா்கள் ராம். செல்வா, பிரதாப், ரங்கசாமி, ஜெகன் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT