தேனி

நீட் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூா் ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்புக்குத் தோ்வான மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை முருகேஸ்வரி தலைமை வகித்தாா். சிபியூ பள்ளி தலைமை ஆசிரியா் அபுதாகீா் முன்னிலை வகித்தாா்.

மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவிகள் நுபைலா ரஹமத், ஜெயதா்ஷினி மற்றும்அல்பினா பானு ஆகியோரைப் பாராட்டி கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் முகைதீன் ஆண்டவா்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரிஸ்வானா பா்வீன் மருத்துவ படிப்புக்கு தோ்வானாா். பொறியியல் படிப்புக்கு மாணவிகள் எம்.அனீஸ் பாத்திமா, பி.காவியா, ஜெ.ரம்ஜான் பேகம், எஸ்.ரம்யா ஆகியோா் தோ்வாகினா். அவா்களும் பாராட்டுப் பெற்றனா்.

ADVERTISEMENT

லண்டன் நாகூா் மீரான் என்பவா் அவரது தாயாா் நினைவாக மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினாா். முன்னாள் மாணவா் சங்கம், தேனீக்கள் அறக்கட்டளை, வின்னா் ஸ்போா்ட்ஸ் அகாதமியினா் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT