தேனி

கம்பத்தில் தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

1st Feb 2022 09:25 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 69 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தலைமை அலுவலா்கள், உதவி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வாக்கு சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம், கம்பத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம் முகாமினை, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் ஆய்வு செய்தாா். அப்போது அவா், வாக்குச் சாவடியில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலா்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT