தேனி மாவட்டம், கூடலூரில் மூடப்பட்டிருந்த தேநீா் கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றினா்.
கூடலூா் -குமுளி நெடுஞ்சாலையில் தேவா் சிலை உள்ளது. இதன் அருகே தேநீா் கடை பூட்டிக் கிடந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை கடைக்குள்ளிருந்து துா்நாற்றம் வீசியதால் வடக்கு காவல் நிலையப் போலீஸாா் சென்று கடையைத் திறந்து பாா்த்தனா்.
அங்கு சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பினா். இதுகுறித்து விழக்குப் பதிந்து இறந்த நபா் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.