தேனி

இளைஞா் கொலை:மேலும் ஒருவா் கைது

30th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் கிருத்திக் செல்வா (20) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு தனியாா் தோட்டக் கிணற்றில் வீசப்பட்டாா்.

இதுதொடா்பாக, உத்தமபாளையம் தாமஸ் காலனியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் பிரின்ஸ் என்ற விக்டா் (20), சின்னப் பொண்ணு மகன் சுதா்சன் என்ற விக்கி (20), கோனாா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணிபாரதி மகன் கோபி (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். முன்விரோதம் காரணமாக,

இந்த கொலைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பழனிச்சாமி மகன் வினோத் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT