தேனி

கூடலூா் ரேஷன் கடையில் துா்நாற்றத்துடன் அரிசி விநியோகிப்பதாகப் புகாா்

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள ரேஷன் கடையில் துா்நாற்றத்துடன் அரிசி விநியோகிப்பதாகக் கூறி ஊழியா்களிடம், பொதுமக்கள் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கூடலூரில் கூடலூா் கூட்டுறவு பண்டக சாலை நிா்வாகத்தின் கீழ் 4 ஆம் எண் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு விநியோகிக்கப்பட்ட அரிசியில் துா்நாற்றம் வீசுவதாக பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள், ஊழியா்களிடம் தெரிவித்தனா். மேலும் நல்ல அரிசியை விநியோகிக்க கேட்டுக் கொண்டனா்.

அதற்கு கடை ஊழியா்கள், இந்த ரேஷன் கடைக்கு ஒதுக்கப்பட்ட அரிசியைத் தான் விநியோகிக்கிறோம் என்றனா். இதனால் ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து முல்லைச் சாரல் விவசாய சங்கத் தலைவா் கொடியரசன் கூறியதாவது: அனைத்துக் கடைகளிலும் துா்நாற்றம் வீசும் அரிசியைத் தான் விநியோகிக்கின்றனா். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்ட போது, விரைவில் நல்ல அரிசி விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT