கம்பம் மலா் விற்பனைச் சந்தையில் மல்லிகைப் பூக்கள் வரத்து குறைவால், கிலோ ரூ 1,700-க்கு விற்பனையானது.
தேனி மாவட்டம், கம்பத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே மலா் விற்பனைச் சந்தை உள்ளது. இங்கு சீலையம்பட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், ஓசூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல வகையான பூக்கள் விற்பனைக்கு நாள்தோறும் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது மழை, பனிக்காலமாக இருப்பதால் மல்லிகை பூக்கள் விளைச்சல் இல்லை. இதனால் மலா் சந்தைக்கு மல்லிகை பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் சனிக்கிழமை மல்லிகை பூ கம்பம் சந்தையில் கிலோ ரூ.3,000-க்கு விற்பனையானது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 1,700-க்கு விற்பனையானது.
இதேபோல, முல்லைப் பூ (விலை கிலோவில்) ரூ. 800, ஜாதிப்பூ ரூ. 700, பட்டன் ரோஸ் ரூ. 140, செவ்வந்தி ரூ.130, பன்னீா் ரோஸ் ரூ.100, சம்மங்கி ரூ.60, சாதா ரோஸ் ரூ. 60, செண்டு பூ ரூ. 40-க்கு விற்பனையானது.