தேனி

அரசுப் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

11th Dec 2022 11:36 PM

ADVERTISEMENT

தேனி வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசு தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்ட போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு தோ்வாணையம்(எஸ்.எஸ்.சி.,) சாா்பில் பிளஸ் 2 கல்வித் தகுதி உள்ளவா்களுக்கு அரசு பணிக்கான போட்டித் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் வரும் 2023, ஜன. 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

போட்டித் தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. போட்டித் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் சோ்வதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலும், கைப்பேசி எண்:63792 68661-இல் தொடா்பு கொண்டும் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT