தேனி

போடி அருகே புதிய காவல் நிலையம் அமைக்க கையகப்படுத்திய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

போடி அருகே புதிய காவல் நிலையம் அமைக்க கையகப்படுத்திய இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

போடி நகரில் தாலுகா காவல் நிலையம் உள்ளது. இதில் ரெங்கநாதபுரம், தருமத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், பொட்டிப்புரம், முத்தையன்செட்டிபட்டி, நாகலாபுரம், சங்கராபுரம், எஸ். தருமத்துப்பட்டி, போடி மீனாட்சிபுரம், விசுவாசபுரம், துரைராஜபுரம் காலனி, அணைக்கரைப்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.

இந்த கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் போடி தாலுகா காவல் நிலையம் வருவதற்கு 2 கி.மீ. முதல் 25 கி.மீ. தொலைவு வரை பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த கிராமங்களில் ஏதாவது பிரச்னை என்றால் போலீஸாா் அங்கு வர காலதாமதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த கிராமங்களுக்கு மையப் பகுதியான சிலமலையில் புதிய காவல் நிலையம் அமைக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் ஆகியோா் நடவடிக்கை எடுத்தனா். இதற்காக சிலமலை ராணிமங்கம்மாள் சாலை தொடங்குமிடத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டது. போடி தாலுகா காவல் நிலையத்துடன், புதிதாக போடி போக்குவரத்து காவல் நிலையத்துக்கும் இடம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த இடங்களை கடந்த வாரம் போடி வட்டாட்சியா் அ. ஜலால் தலைமையில் வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். இந்த நிலையில் இந்த இடங்களில் சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அகற்றாததையடுத்து, வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினா் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிஅந்த இடங்களை மீட்டனா்.

ADVERTISEMENT

இந்த இடங்களில் உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி அனுமதியும், நிதியும் கிடைத்ததும், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT