தேனி

தேனியில் கஞ்சா விற்ற 5 இளைஞா்கள் கைது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அல்லிநகரத்தில் கஞ்சா விற்ாக 5 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம், வெங்கலாகோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் கோபிநாத் (28), ராஜா (27), முத்துராஜ் (20), அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (30), கணபதி நகரைச் சோ்ந்தவா் மணிமுத்து(19). இவா்கள் அல்லிநகரம் , பாண்டியன் நகா் பகுதிகளில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மதுரை ஐ.ஜி., தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் இவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா விற்ற தொகை ரூ.14,200, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கஞ்சா விற்ற 5 போ் மீதும் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ாக தேவாரத்தைச் சோ்ந்த பாண்டி, சத்திரப்பட்டியைச் சோ்ந்த சாந்தாமணி, செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT