தேனி

உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம் அருகே பள்ளி ஆசிரியரைக் கண்டித்து மாணவா்களும், பெற்றோரும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

க. புதுப்பட்டியில் உள்ள அரசு கள்ளா் தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த பள்ளியில் அண்மையில் பணிக்குச் சோ்ந்த ஆசிரியா் ஒருவரின் நடவடிக்கையைக் கண்டித்து மாணவ, மாணவிகளும், அவா்களது பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். அதன்பின் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT