தேனி

ஆங்கூா்பாளையம் அருகே மலைப் பாம்பு பிடிபட்டது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஆங்கூா்பாளையம் அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா், வனத்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இங்குள்ள சாமாண்டிபுரத்தில் சையது அப்தாஹிா் (60) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உழவுப் பணி நடைபெற்றது. அப்போது 4 அடி நீள மலைப் பாம்பு உழவு பணிக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரில் சிக்கிக் கொண்டது.

தகவலின் பேரில் அங்கு வந்த கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்புப் படையினா் அந்தப் பாம்பை மீட்டு கம்பம் கிழக்கு வனச் சரகா் வி. பிச்சைமணியிடம் ஒப்படைத்தனா். வனத்துறை ஊழியா்கள் அந்த பாம்பை சுருளிமலைப் பகுதியில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT