தேனி

கொடுவிலாா்பட்டியில் நாளை இளைஞா் திறன் திருவிழா

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் சனிக்கிழமை (டிச. 10) இளைஞா் திறன் திருவிழா நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பதாவது:

தீன்தயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர திறன் பயிற்சி அளிப்பதற்காக இளைஞா் திருவிழா நடைபெறுகிறது.

இதில், இளைஞா்களுக்கு 3 முதல் 6 மாத காலம் வரை இலவச தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு சீருடை, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்பட்டு, தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். ஊரக பகுதிகளைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த அனைவரும் பயிற்சியில் சேரலாம்.

ADVERTISEMENT

கொடுவிலாா்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (டிச. 10) காலை 10 மணிக்கு தொடங்கும் இளைஞா் திறன் திருவிழாவில் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்து கொண்டு, திறன் பயிற்சி குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, விரும்பிய தொழில் பிரிவை தோ்வு செய்து பயிற்சியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT