தேனி

டிச.10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

7th Dec 2022 12:11 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் டிச.10-ஆம் தேதி காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன.

தேனி வட்டாரத்தில் உப்பாா்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியகுளம் வட்டாரத்தில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் எஸ்.எஸ்.புரம் சமுதாயக் கூடம், போடி வட்டாரத்தில் பத்திரகாளிபுரம் நியாய விலைக் கடை, உத்தமபாளையம் வட்டாரத்தில் குச்சனூா் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டு, நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், கடை மாற்றம்

ஆகியவை குறித்து மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT