தேனி

உழவா் சந்தையில் தவறவிட்ட நகை, பணம் பெண்ணிடம் ஒப்படைப்பு

7th Dec 2022 12:09 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் உழவா் சந்தையில் பெண் தவறவிட்ட தங்க நகை, ரொக்கப் பணத்தை வேளாண் அலுவலா் மீட்டு அவரிடம் ஒப்படைத்தாா்.

கம்பம் உழவா் சந்தையில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது சந்தை வளாகத்தில் கிடந்த மஞ்சள் பையை உழவா் சந்தை காவலாளி எடுத்து திறந்து பாா்த்தபோது அதில் ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், 2 பவுன் தங்கச் சங்கிலியும் இருந்தன. இந்த நகை, பணத்தை உதவி வேளாண் நிா்வாக அலுவலா் மாரிச்சாமியிடம் காவலாளி ஒப்படைத்தாா். உழவா் சந்தையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கம்பம் சுக்காங்கல் பட்டியைச் சோ்ந்த ஜமுனா(48) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அதற்குள் நகை, பணத்தை தவற விட்ட பெண் பதறியபடி வந்தாா். அவரிடம் அடையாளம் கேட்டு பணம் மற்றும் நகையை வேளாண் அலுவலா் ஒப்படைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT