தேனி

கம்பம் காவலருக்குப் பாராட்டு விழா

7th Dec 2022 12:07 AM

ADVERTISEMENT

ஆசிய பசிபிக் மாஸ்டா் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள கம்பம் காவலருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவலராக பணியாற்றுபவா் பி.மாரியப்பன். ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியா பசிபிக் மாஸ்டா் கேம்ஸ் -2023 விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவில் உள்ள ஜியோன் பக் நகரில் மே 12 முதல் 20- ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் காவலா் மாரியப்பன் கலந்து கொள்கிறாா். இவருக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

மேலும், போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ரூ. 30 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா். நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் பி.சரவணன், மாவட்ட திமுக துணைச் செயலாளா் குரு.இளங்கோ, நகரச் செயலாளா்கள் சூா்யா செல்வகுமாா், எம்.சி. வீரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT