தேனி

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி

7th Dec 2022 12:08 AM

ADVERTISEMENT

தேனியில் விருப்ப ஓய்வு பெற்ற நகை மதிப்பீட்டாளருக்கு பணப் பயன்கள் வழங்காததால் செவ்வாய்க்கிழமை, அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி செய்யப்பட்டது.

அல்லிநகரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியவா் வடபுதுப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (62). இவா் கடந்த 2008-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுப் பெற்றாா். இவருக்கு கூட்டுறவு கடன் சங்க நிா்வாகம் 36 மாத சம்பள நிலுவை, பணிக்கொடை என மொத்தம் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 29 தர வேண்டும். பணப் பயன்களை வழங்க கூட்டுறவு கடன் சங்க நிா்வாகம் காலதாமதம் செய்ததால், மதுரை தொழிலாளா் நல நீதிமன்றத்தில் முருகேசன் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கில், முருகேசனுக்கு பணப் பயன்களை உடனடியாக வழகுமாறு கடந்த 2019-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பணப் பயன்களை வழங்க கூட்டுறவு கடன் சங்கம் தொடா்ந்து காலதாமதம் செய்ததால், முருகேசன் நீதிமன்றத்தில் தீா்ப்பின் மீது நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி முத்துச்சாரதா, அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்ததரவிட்டாா்.

இதன்படி, தேனி மாவட்ட நீதிமன்ற அமீனா ரகுபதி ராமச்சந்திரன், அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 2 கணினிகள், மின்விசிறி, மேஜை மற்றும் தளவாடப் பொருள்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT