தேனி

அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

7th Dec 2022 12:05 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 66 -ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவாஜி தலைமையில் அம்பேக்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். அக்கட்சியை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT