தேனி

பிரதோஷம்: போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

6th Dec 2022 03:27 AM

ADVERTISEMENT

போடியில் பிரதோஷம், சோமவார தினத்தையொட்டி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற பூஜையில் சிவலிங்கப் பெருமானுக்கு 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

108 சங்குகளில் புனித நீா் நிரப்பி பூஜை செய்யப்பட்டு பின்னா் சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். பின்னா் பரணி காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயில், பரமசிவன் மலைக் கோயில், பிச்சரங்கரை மலை கிராமத்தில் உள்ள கீழச்சொக்கநாதா் கோயில், மேலச்சொக்கநாதா் கோயில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT