தேனி

சகோதரியின் கணவருக்கு அரிவாள் வெட்டு: மைத்துனா் கைது

6th Dec 2022 03:27 AM

ADVERTISEMENT

போடியில் சகோதரியின் கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற மைத்துனரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவில் வசிப்பவா் தீபாவளிராஜ் (60). இவரது மனைவி ஈஸ்வரி. ஈஸ்வரியின் தம்பி சுதாகா் (32) வீட்டில் தீபாவளிராஜ் ஒத்திக்கு குடியிருந்தாா். சுதாகருக்கு கடன் பிரச்னை ஏற்படவே அந்த வீட்டை விற்பதற்காக தீபாவளிராஜை காலி செய்யுமாறு கூறினாா். ஒத்திப்பணம் திருப்பித் தருவதில் பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், போடி வினோபாஜி காலனி அருகே சென்ற தீபாவளிராஜை, அங்கு வந்த சுதாகா் அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த தீபாவளிராஜ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தீபாவளிராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், போடி தாலுகா போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சுதாகரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT