தேனி

உத்தமபாளையம் கல்லூரி மாணவா்கள் தேசிய சிலம்பப் போட்டியில் வெற்றி

6th Dec 2022 03:25 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றனா்.

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில் கன்னியாகுமரியில் தூய பேதுரு ஆலய வளாகத்தில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். அதில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரியை சோ்ந்த கெளசிக் 19 வயது பிரிவிலும் , தெய்வேந்திரன் 18 வயது பிரிவிலும் ஒற்றை, இரட்டைக் கம்பு, ஆயுதம் பிரிவு ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றனா்.

இதற்காக, திங்கள்கிழமை போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT