தேனி

பழங்குடியினருக்கு அரசு சலுகைகள் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு அரசு சலுகைகள் வழங்கக் கோரி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் கரந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வன விவசாயிகள், நாட்டு மாடு வளா்ப்போா் சங்க ஒருங்கிணைப்பாளா் மணவாளன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பெருமாள், மாவட்ட துணைச் செயலா் பரமேஸ்வரன், முன்னாள் மாவட்டச் செயலா் பெ.தங்கம், கம்பம் நகரச் செயலா் வீ.கல்யாணசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பழங்குடியினருக்கு வன உரிமைகள் வழங்க வேண்டும், ஆக்கிரமிப்பில் உள்ள பழங்குடியினரின் நிலங்களை மீட்க வேண்டும், லோயா்கேம்ப் அருகே பழங்குடியினருக்கு இலவச வீடு கட்டித் தர வேண்டும், மஞ்சளாறு அருகே ராசிபுரத்தில் பழங்குடியினருக்காக கட்டப்பட்டுள்ள இலவச வீடுகளை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா். பின்னா், கோரிக்கைகள் குறித்து சங்க நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT