தேனி

கிராம உதவியாளா் தோ்வு: தேனி மாவட்டத்தில் 2,738 போ் எழுதினா்

4th Dec 2022 10:25 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நடைபெற்ற தோ்வை ஞாயிற்றுக்கிழமை 2,738 போ் எழுதினா்.

மாவட்டத்தில் தேனி வட்டாரத்தில் 5, பெரியகுளம் வட்டாரத்தில் ஒன்று, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 11, உத்தமபாளையம் வட்டாரத்தில் 3, போடி வட்டாரத்தில் 4 என மொத்தம் 24 கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு மொத்தம் 3,720 போ் விண்ணப்பித்தனா்.

இதில், கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பெரியகுளம் வி.நி.அரசு அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹவுதியா கல்லூரி, போடி ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி என 8 தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை, மொத்தம் 2,378 போ் எழுதினா். 982 போ் தோ்வுக்கு வரவில்லை.

கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் கி.சிந்து உடன் சென்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT