தேனி

கூலித் தொழிலாளி தற்கொலை

4th Dec 2022 10:26 PM

ADVERTISEMENT

கம்பம் அருகே கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே அணைப்பட்டி வடக்கு காலனியை சோ்ந்த ஐய்யப்பன் மகன் சந்திரன்(48). இவா், கம்பம் அருகேயுள்ள க.புதுப்பட்டி செங்கல் காளவாசலில் கூலி வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா், சந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக, உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT