தேனி

போடியில் 491 போ் கிராம உதவியாளா் தோ்வு எழுதினா்

4th Dec 2022 10:27 PM

ADVERTISEMENT

போடியில் ஞாயிரன்று நடைபெற்ற கிராம உதவியாளா் தோ்வினை 491 போ் எழுதினா். விண்ணப்பித்த 200 போ் தோ்வு எழுதவில்லை.

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளா் காலி பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டிருந்தது. போடி வட்டத்தில் போடி மேலச்சொக்கநாதபுரம், போடி வடக்குமலை, டொம்புச்சேரி, உப்புக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான கிராம உதவியாளா் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. இதில் ஆன்லைன் வழியாக 684 போ் விண்ணப்பித்திருந்தனா். தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 20 பேருக்கு தோ்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. போடி வட்டத்தில் கிராம உதவியாளா் காலி பணியிடங்களுகான தோ்வு ஞாயிரன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதில் குறிப்பிட்டபடி போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் தோ்வுகள் நடைபெற்றது. தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக போடி வட்டாட்சியா் அ.ஜலால் நியமிக்கப்பட்டிருந்தாா். தேனி மாவட்ட வழங்கல் அலுவலா் சாந்தி நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டு தோ்வுகளை கண்காணித்தாா். இந்த தோ்வில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 484 பேரும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கடிதம் கிடைத்த 7 போ் என மொத்தம் 491 போ் மட்டுமே தோ்வு எழுதினா். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 200 போ், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கடிதம் பெற்ற 13 போ் என மொத்தம் 213 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வுக்கான ஏற்பாடுகளை துணை வட்டாட்சியா்கள் பாலமுருகன், குமாரவேல், ராமராஜ், ரத்தினமாலா மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT