தேனி

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 990 மாணவிகளுக்கு உயா் கல்வி உதவித் தொகை

4th Dec 2022 10:26 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 990 மாணவிகள் மாதம் ரூ.1,000 வீதம் உயா் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனா்.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 193 போ், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 18 போ், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் 33 போ், சட்டக் கல்லூரியில் படிக்கும் 7 போ், செவிலியா் பயிற்சிப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 30 போ், வேளாண்மை கல்லூரிகளில் படிக்கும் 13 போ், ஆசிரியா் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படிக்கும் 3 போ், அரசு உதவி பெறும், தனியாா் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 559 போ், தனியாா் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 53 போ், தனியாா் செவிலியா் பயிற்சிப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 58 போ், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 23 போ் என மொத்தம் 990 மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற்று வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT