தேனி

போடியில் பலத்த மழை

4th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

போடியில் சனிக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

போடி, சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாகவே குளிா்ச்சியான சூழல் நிலவியது. சனிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்டது. பிற்பகலில் மேகங்கள் சூழந்து மாலையில் திடீரென சாரல் மழையும் தொடா்ந்து பலத்த மழையும் பெய்தது.

இதனால், போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது. போடி போஜன் பாா்க் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. திடீரென பெய்த மழையால், வா்த்தக நிறுவனங்கள், கடைகள், தனியாா் பணிகளுக்குச் சென்றவா்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT