தேனி

சுருளிமலை ஐயப்பன் கோயிலில் புஷ்பாபிஷேகம்

4th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை புஷ்பாபிஷேகம், சிறப்பு படிபூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சனிக்கிழமை மாலை நடைதிறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பின்னா் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 18- படிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கம்பம் வட்டாரத்தைச்சோ்ந்த ஏராளமான ஆண் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா், பின்னா் அத்தாழ பூஜை, தீபாராதனை நடைபெற்ற பின் பிரசாதம் வழங்கப்பட்டது. ஹரிவரசனம் பாடப் பெற்ற பிறகு நடை சாத்தப்பட்டது.

பூஜைக்கான ஏற்பாடுகளை சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி உதவியாளா் கணேஷ் திருமேனி, ஆகம விதிகளின்படி செய்திருந்தாா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் பொன்.காட்சிக்கண்ணன், பக்தா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT