தேனி

மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளா்கள் பலி

4th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

குமுளி அருகே தனியாா் ஏலக்காய் தோட்டத்தில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அட்டப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிவராஜ் (55), சுபாஷ் (45). உறவினா்களான இவா்கள் இருவரும் முருக்கடியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சனிக்கிழமை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இவா்கள் நின்று வேலை செய்த இரும்பு ஏணி அருகே சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது. அப்போது, இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிவராஜ், சுபாஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT