தேனி

மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

4th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

போடி அருகே தகராறில் மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

போடி அருகே துரைராஜபுரம் காலனியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் விஜயராஜன் (42). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடி குரங்கணிக்கு அருகே மேல் முட்டம் கிராமத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு அருகே தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.

இதனால் இருவரும் சோ்ந்து மேல் முட்டம் மலைப் பகுதியில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கி அங்கு தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தனா். இந்த வீட்டில் செல்வராஜ், தோட்ட வேலைக்காக வேறு சில நபா்களையும் வீட்டில் தங்க வைப்பதற்கு அழைத்து வந்தாா். இதற்கு விஜராஜன் எதிா்ப்புத் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, செல்வராஜ், சாந்தி உள்ளிட்ட 7 போ், விஜயராமனை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அவரது தாய் மாரியம்மாளை (65) தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குரங்கணி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதன்பேரில், போலீஸாா் செல்வராஜ் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT