தேனி

உத்தமபாளையம், நிலக்கோட்டையில் மழை

4th Dec 2022 10:27 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதேபோல, சின்னமனூா் அதன் சுற்று வட்டாரத்திலும் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளபட்டி, விளாம்பட்டி, சிலுக்குவாா்பட்டி, மைக்கேல்பாளையம், காமலாபுரம், செம்பட்டி, கொடைரோடு ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரிப்

ADVERTISEMENT

பயிா் சாகுபடி செய்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT