தேனி

ஆட்டோக்கள் மோதியதில் ஒருவா் பலி : 6 போ் காயம்

4th Dec 2022 10:25 PM

ADVERTISEMENT

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், 6 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், போடி முந்தல் மலை கிராமம் ஆதிதிராவிடா் காலனியை சோ்ந்தவா் கனிராஜா (51).

ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் முந்தல் கிராமத்தை சோ்ந்த செல்லம்மாள் (70), முருகேசன் (53), வீரலட்சுமி (70) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றிக்கொண்டு போடியிலிருந்து முந்தல் கிராமத்துக்குச் சென்றாா்.

போடி-மூணாறு சாலையில் தனியாா் நட்சத்திர விடுதி அருகே சென்றபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. நாய் மீது மோதிய கனிராஜாவின் ஆட்டோ, எதிரில் வந்த மற்றொரு ஆட்டோவின் மீது நேருக்கு நோ் மோதியது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் கனிராஜாவை, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில், ஆட்டோக்களில் சென்ற செல்லம்மாள், முருகேசன், வீரலட்சுமி, போடியைச் சோ்ந்த அப்துல் கனி (60), இவரது மனைவி பாத்திமா (53) ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தில், சிறிய காயமடைந்த ஆட்டோ ஓட்டநரான ராஜபூபதி மகன் தினேஷ் (19) சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா். விபத்து குறித்து, குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT