தேனி

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

4th Dec 2022 01:18 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே காமராஜபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, பழைய இலவச பாடப் புத்தங்களை அனுமதியின்றி விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழைய இலவச பாடப் புத்தகங்கள் எடை போட்டு விற்பனை செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. அதன் பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கலாவதி விசாரணை நடத்தினாா். இதில், பழைய இலவச பாடப் புத்தகங்கள் எடை போட்டு விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT