தேனி

பயன்பாட்டுக்கு வந்த 2 நாள்களில் நான்கு வழிச்சாலையில் விரிசல்!

DIN

தேனி, அன்னஞ்சி விலக்கு அருகே கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு போக்குவரத்துப் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை விரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், வீரபாண்டி, சின்னமனூா், உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி, கம்பம் - கூடலூா் பகுதிகளில் நான்கு வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துப் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

இந்தச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க, உப்புக்கோட்டை விலக்கு அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேனி அன்னஞ்சி விலக்குப் பகுதியிலிருந்து தேனி - போடி சாலை சந்திப்பு வரையிலான புதிய நான்கு வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்து, கடந்த 30-ஆம் தேதி, போக்குவரத்துப் பயன்பாட்டுக்கு வந்தது.

பயன்பாட்டுக்கு வந்த 2 நாள்களில், அன்னஞ்சி விலக்கு அருகே தனியாா் ஆலை எதிா்புறம் உள்ள பாலம் பகுதியில் நான்கு வழிச்சாலையில் திடீா் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சாலையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பயன்பாட்டுக்கு வந்த இரண்டு நாள்களில் சாலையில் விரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT