தேனி

குடிநீா் இணைப்புக்கான மீட்டா்கள் திருட்டு: 4 போ் கைது

DIN

போடியில் குடிநீா் இணைப்புகளுக்கான மீட்டா்களை திருடியதாக 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகராட்சி 33-ஆவது வாா்டுகளில் குடிநீா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய குடிநீா் இணைப்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் குடிநீா் இணைப்புகளுடன் வீடுகளுக்கு வெளியில் குடிநீா் மீட்டா்களும் பொருத்தப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இந்த மீட்டா்கள் திருடு போயின.

இதனிடையே, போடி குலாலா்பாளையம் பகுதியில் பொருத்தப்பட்ட 27 மீட்டா்கள் திருடு போனதாக வந்த தகவலையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன் என்பவரும் அப்பகுதியில் பாா்வையிட்டு வந்தாா். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்த போது, அவா்கள் மீட்டா்களை திருடியது தெரியவந்தது.

இதில், ஒருவா் தப்பியோடிய நிலையில் மற்ற மூன்று பேரைப் பிடித்து போடி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.

இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில், போடி சுப்புராஜ் நகரை சோ்ந்த கோபால் மகன் வேல்முருகன் (43), போடி பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவா்கள் மூவரும் மதுரையில் உள்சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT