தேனி

கம்பத்தில் கலைத் திருவிழா

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், கம்பம் வட்டார வள மையம் சாா்பில், கம்பம் மைதீன் ஆண்டவா்புரத்தில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த கலைத் திருவிழா நடைபெற்றது.

விழாவுக்கு, கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், முதன்மைக் கல்வி அலுவலா் ச. சேந்திவேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளை தலைமை ஆசிரியா் கே. எம். சிவாஜி தொகுத்து வழங்கினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலா் த. மகாலட்சுமி, வள மைய மேற்பாா்வையாளா் ரா. பாரதராணி, சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஓ. ராசாத்தி, நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் உவரி அந்தோணியம்மாள் ஆகியோா் செய்திருந்தனா்.

முன்னதாக, லோயா்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றாா். முடிவில், குள்ளப்பகவுண்டன்பட்டி தலைமை ஆசிரியா் பாசுமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT