தேனி

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி வட்டாரச் செயலா் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் சி. முனீஸ்வரன், சிஐடியு மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, மாணவா் சங்க மாவட்டச் செயலா் வேல்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இளைஞா்களின் வேலைவாய்ப்பை சிதைக்கும் அரசாணை எண்: 152, 115 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பணிகளில் ஒப்பந்த ஊதியம், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளா்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT