தேனி

மின்சாரம் பாய்ந்ததில் சமையலா் பலி

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் தனியாா் உணவகத்தில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் சமையலா் உயிரிழந்தாா்.

காமாட்சிபுரம், சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி (60). இவா், தேனியில் மதுரை சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையலராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்ததில் மயக்கி விழுந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT