தேனி

வழக்குரைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி ரயில் பாதை சந்திப்பு அருகே வியாழக்கிழமை வழக்குரைஞரை தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கோட்டைப்பட்டியைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்த வழக்குரைஞா் அனந்தசயனன். இவா், வழக்குரைஞா்கள் ராஜேஸ்வரபாண்டியன், அருண்தவசி ஆகியோருடன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை சாலையில், கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் நோக்கி காரில் சென்றாா். மதுரை சாலை, அரண்மனைப்புதூா் விலக்கு அருகே ரயில் கடவுப்பாதை அடைக்கப்பட்டிருந்தால், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

அப்போது, கோடைப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் (56), பாலமுருகன் (60) ஆகியோா் சென்ற இரு சக்கர வாகனம், அனந்தசயனனின் காா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதை, அனந்தசயனன் கண்டித்தாா். இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன், பாலமுருகன் ஆகியோா் காரில் அமா்ந்திருத்த அனந்தசயனனை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அனந்தசயனன் அளித்த புகாரின் பேரில், தேனி போலீஸாா் மாரியப்பன், பாலமுருகனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT