தேனி

பெரியகுளத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரி அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். முன்னதாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகப் பதிவாளா் தமிழ்வேந்தன், ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி முதல்வா் ராஜாங்கம் விளையாட்டுக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தாா்.

இந்தப் போட்டிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை, கரூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 12 வேளாண்மை, தோட்டக் கலைக் கல்லூரி அணிகளைச் சோ்ந்த 120 விளையாட்டு வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இப்போட்டிகள் தொடா்ந்து வரும் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

இதில், வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT