தேனி

பொது மருத்துவ பரிசோதனை முகாம்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், அலுவலா்கள், கவுன்சிலா்கள், ஊழியா்கள், தூய்மை பணியாளா்களுக்கான பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகரசபைத் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காஞ்சனா முன்னிலை வகித்தாா்.

முகாமில், கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பி. முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த அழுத்தம், சா்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில், ஆணையா் காஞ்சனா, பொறியாளா் வரலட்சுமி, மேலாளா் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT