தேனி

காா் மோதியதில் தொழிலாளி பலி

1st Dec 2022 01:59 AM

ADVERTISEMENT

தேனி அருகே நாகலாபுரத்தில் புதன்கிழமை சாலையோர மரங்களில் விதைகளை சேகரித்த கூலித் தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சின்னராசு (60). இவா், நாகலாபுரம்- தேனி சாலையோரத்தில் புங்கை மரங்களில் இருந்து உதிா்ந்த விதைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, தேனியை நோக்கி சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிரபு (40) என்பவா் ஓட்டிச் சென்ற காா், சின்னராசு மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சின்னராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் பிரபுவிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT