தேனி

ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

31st Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

பலத்த மழை காரணமாக ஹைவேவிஸ் - மேகமலை சாலையில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 8 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இந்த மலை கிராமங்களுக்குச் செல்ல சின்னமனூரிலிருந்து இரவங்கலாா் வரையில் 52 கிலோ மீட்டா் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மலைகளில் திடீரென அருவிகள் உருவாகின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சின்னமனூரிலிருந்து இரவங்கலாா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அங்குள்ள 10 ஆவது கொண்டை ஊசி வளைவு அடுக்கம்பாறை வழியாக சென்றபோது சாலையில் ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்து கிடந்தது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT